ஓராண்டுக்குப் பிறகு ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்று நகை வாங்கலாமா?

Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Published on: November 17, 2026 at 2:23 pm

சென்னை, நவ.17, 2026: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஓராண்டுக்குப் பிறகு ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 9-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக விலை குறைந்து, நவம்பர் 16-ம் தேதி ஒரு கிராம் ரூ.12,540-க்கும், சவரன் ரூ.1,00,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 17) தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம், டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவு ஆகியவை தங்கம் விலை குறைவதற்கு முக்கிய காரணங்களாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : டிவிஎஸ் குடும்ப சொத்துகளைப் பிரிக்கக் கோரும் லட்சுமி வேணு.. தாய் ஆதரவு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com