அழகுக்காக செய்த மாற்றங்களை மறைக்க விரும்பவில்லை – நடிகை ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan Beauty Changes: அழகுக்காக செய்த மாற்றங்களை மறைக்க விரும்பவில்லை என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவிததுள்ளார்.

Published on: November 15, 2026 at 2:27 pm

சென்னை, நவ.15, 2026: நடிகை ஸ்ருதி ஹாசன், தான் செய்துள்ள அழகுக்கான ஒப்பனை மற்றும் அழகியல் சிகிச்சைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதுபோன்ற சிகிச்சைகளை மேற்கொண்டுவிட்டு அதை மறைத்து பொய் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் ‘டபுள் டேட்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இதுகுறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், சிறு வயது முதலே மக்கள் முன்னிலையில் வளர்ந்துள்ளதால் தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

மேலும், ஒவ்வொருவருக்கும் தங்கள் உடல் மற்றும் தோற்றம் தொடர்பாக முடிவெடுக்க முழு உரிமை உள்ளது என்றும், யாருடைய தனிப்பட்ட விருப்பத்தையும் தான் குறை கூறவில்லை என்றும் தெரிவித்தார். அதேநேரத்தில், அழகியல் சிகிச்சைகளை மற்றவர்கள் மேற்கொள்ள வேண்டும் என ஊக்குவிப்பவராக இருக்க விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தனது மதுப்பழக்கம் குறித்தும் பேசிய அவர், தொடர்ந்து 8 ஆண்டுகள் மதுவை முற்றிலும் தவிர்த்ததாகவும், பின்னர் மீண்டும் மது அருந்தத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். தற்போது மதுப்பழக்கத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு வருவதாகவும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கௌதம் ராம் கார்த்திக் புதிய படம்.. டை்ட்டில் என்ன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com