Gold Price Crash Today: தங்கம் விலையில் இன்று (நவ.19, 2026) அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.
Gold Price Crash Today: தங்கம் விலையில் இன்று (நவ.19, 2026) அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது.

Published on: November 19, 2026 at 10:33 am
Updated on: November 19, 2026 at 10:35 am
சென்னை, நவ.19, 2026: தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.255 குறைந்து ஒரு கிராம் ரூ.11,980-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.2,040 குறைந்து ரூ.95,840 ஆக உள்ளது.
24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.13,069-க்கும், 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ரூ.1,04,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.180 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில் 30 ஆண்டுகள் சேவை.. சூப்பர்கேஸ் நிறுவனம் ₹350 கோடி முதலீடு அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com