Keerthy Suresh: மிஷ்கின் கீர்த்தி சுரேஷுக்கு மோதிரம் பரிசளித்தது ஏன் என்பது தெரியுமா?
Keerthy Suresh: மிஷ்கின் கீர்த்தி சுரேஷுக்கு மோதிரம் பரிசளித்தது ஏன் என்பது தெரியுமா?

Published on: November 19, 2026 at 10:11 am
Updated on: November 19, 2026 at 10:13 am
சென்னை, நவ.19, 2026: இயக்குநர் மிஷ்கின், நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தங்க மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். கீர்த்தி நடித்த ‘டோரதி’ திரைப்படத்தைத் தேர்வு செய்து, அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்தப் பரிசை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மிஷ்கின் இவ்வாறு பேசியுள்ளார்.
நடிகர்களை அவர்களின் விருப்பப்படி நடிக்க அனுமதிப்பது தனக்கு வசதியாக இருப்பதாகவும், நடிகர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ் தனது மகள் போன்றவர் என்றும், அவர் நடித்த படங்களில் ‘டோரதி’ மட்டுமே தாம் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
‘டோரதி’ திரைப்படம் தனது இதயத்தைத் தொட்டதாகக் குறிப்பிட்ட மிஷ்கின், நடிகராக இருப்பது சற்று கவலையளிப்பதாகவும், நேர மேலாண்மை கடினமாக இருப்பதால் டிசம்பர் மாதத்துடன் நடிப்பதை நிறுத்தலாமா என யோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ராஜமௌலியின் ‘வாரணாசி’ பட பணிகள் தீவிரம்.. ரிலீஸ் எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com