ராஜமௌலியின் ‘வாரணாசி’ பட பணிகள் தீவிரம்.. ரிலீஸ் எப்போது?

Varanasi Movie Updates: ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன.

Published on: November 18, 2026 at 1:12 pm

ஹைதராபாத், நவ.18, 2026: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் பின்னணி இசை ஒலிப்பதிவு ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்னும் டப்பிங் பணிகள் தொடங்கப்படவில்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

ரசிகர் ஒருவர் எக்ஸ் (X) தளத்தில் படத்தின் நிலை குறித்து கேட்ட கேள்விக்கு, படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன், சி.ஜி கிராபிக்ஸ் மற்றும் ரி-ரெக்கார்டிங் பணிகள் நடைபெறுவதாகவும் படக்குழு பதிலளித்துள்ளது. மேலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பெரிய அப்டேட்டுக்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.

மகேஷ் பாபு ருத்ரா கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா மந்தாகினி கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் சுகுமாரன் கும்பா என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இப்படம், 2027 ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பாரதியார் பாடலுக்கு கிராமி விருது பரிந்துரை.. முதல் தமிழ் பாடலாக சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com