Instagram: இன்ஸ்டாகிராம் பரிந்துரைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Instagram: இன்ஸ்டாகிராம் பரிந்துரைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Published on: November 18, 2026 at 1:28 pm
சென்னை, நவ.18, 2026: இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவதைத் தடுக்க, இந்தியாவில் அதன் பரிந்துரை அமைப்புகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.
இந்த மாற்றங்கள், பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளுக்குப் பொருந்தும். குறிப்பாக, ரீல்ஸ், எக்ஸ்ஃப்ளோர் மற்றும் ஃபீட் ஆகியவற்றில் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கங்களை வடிகட்ட, மேம்பட்ட ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தவறான தகவல்கள், திரிக்கப்பட்ட அல்லது சூழலுக்கு பொருந்தாத பதிவுகள் அதிகமாகப் பரப்பப்படுவதைத் தடுக்க, சமூக வலைதளங்களின் பரிந்துரை முறைகளை ஆய்வு செய்யுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இந்த அறிவுறுத்தலுடன் புதிய மாற்றங்கள் தொடர்புடையதா என்பதை மெட்டா உறுதிப்படுத்தவில்லை.
மெட்டா நிறுவனம் தெரிவித்தபடி, புதிய நடவடிக்கைகளுக்குப் பிறகு பரிந்துரைக்கப்படும் பதிவுகள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கும் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதியாகக் குறைந்துள்ளது. மேலும், பயனர்கள் விரும்பாத பதிவுகளை மறைக்கவும், விருப்பம் இல்லை தெரிவை பயன்படுத்தவும், சென்சிடிவ் கன்டென்ட் கன்ட்ரோல் மூலம் உணர்வுபூர்வமான உள்ளடக்கங்களைக் குறைக்கவும் வசதிகள் உள்ளன.
இதையும் படிங்க : சென்னையில் ஏ.ஐ. மூலம் ஸ்மார்ட் பார்க்கிங் வசதி.. அண்ணா நகரில் விரைவில் சோதனைத் திட்டம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com