DMK Delimitation Bill Stand: தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்தால், திமுக ஆதரிக்குமா என செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர்.
DMK Delimitation Bill Stand: தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்தால், திமுக ஆதரிக்குமா என செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர்.

Published on: November 18, 2026 at 3:41 pm
சென்னை, நவ.18, 2026: தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்தால், திமுக ஆதரிக்குமா என செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கடந்த முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று திமுக தெளிவாக வலியுறுத்தியதாகக் கூறினார்.
மீண்டும் தாக்கல் செய்யப்படும் மசோதாவில் என்னென்ன திருத்தங்கள் இடம்பெறுகின்றன என்பது தெரியாமல், திமுகவின் நிலைப்பாட்டை தற்போது கூற முடியாது என்றும் கனிமொழி தெரிவித்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கனிமொழி, தவெகவை எதிர்த்து கேள்வி எழுப்பக்கூடிய தலைவர்களை லஞ்ச ஒழிப்புத்துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது என்றும், அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு தொடர்ந்து செயல்படும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
இதையும் படிங்க : கொளத்தூர் எம்.எல்.ஏ எப்படி இருக்கிறார்? நீதிமன்றத்தில் வழக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com