Sonia Gandhi Book Launch Invitation: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததா என்பது குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
Sonia Gandhi Book Launch Invitation: சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்ததா என்பது குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

Published on: November 18, 2026 at 12:12 pm
Updated on: November 18, 2026 at 12:14 pm
சென்னை, நவ. 18 2026 : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்பது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்திருக்கலாம்; ஆனால் அது குறித்து தனக்கு தெரியாது என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். மேலும், சோனியா காந்திக்கு மு.க. ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், அவரை தாங்களும் மதிப்பதாகவும் கூறியுள்ளார்.
அழைப்பை ஏற்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய திமுகவினருக்கு முழு உரிமை இருப்பதாகவும், அதில் யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா தொடர்பான அழைப்பு விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் முழுமையாக மீட்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com