Jobs Notification: தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 3,941 குடிநீர் தொட்டி இயக்குநர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Jobs Notification: தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் 3,941 குடிநீர் தொட்டி இயக்குநர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published on: November 18, 2026 at 11:42 am
சென்னை, நவ.18, 2026: தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் காலியாக உள்ள 3,941 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) இயக்குநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மொத்த 40,419 பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் பம்புகளை இயக்குவதில் 5 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அல்லது குறிப்பிட்ட குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அங்கு தகுதியானவர்கள் இல்லையெனில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பரிசீலிக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 25, அதிகபட்ச வயது 58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாதம் ரூ.250 ஊதியம் பெற்று பணியாற்றும் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்.
தேர்வு செய்யப்படுவோர் தினமும் 4 மணி நேரம் பணியாற்ற வேண்டும். காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் நேரங்களில் இரவு பணியும் ஒதுக்கப்படலாம். காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏ.ஐ. இலவச 5 நாள் பயிற்சி.. நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com