CSIR-ல் 2027 ஜனவரி மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

CSIR January 2027 Admission Deadline: CSIR-ல் 2027 ஜனவரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

Published on: November 10, 2026 at 12:49 pm

சென்னை, நவ.10, 2026: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அகாடமி (AcSIR), சென்னையில் உள்ள CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்துடன் (CSIR-SERC) இணைந்து, 2027 ஜனவரி கல்வி அமர்வுக்கான ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொறியியல் துறையில் பிஎச்.டி. (PhD) மற்றும் எம்.டெக். உடன் பிஎச்.டி. இணைந்த இரட்டை பட்டப்படிப்பு (Integrated Dual Degree) ஆகியவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டமைப்புகள், பாலப் பொறியியல், கட்டுமானப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு நவீன ஆராய்ச்சி ஆய்வகங்கள், உயர் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் கணினி வசதிகளுடன் ஆராய்ச்சி மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், CSIR, UGC-JRF உள்ளிட்ட தேசிய அளவிலான ஆராய்ச்சி உதவித்தொகைகளும் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 10-ம் தேதியான இன்று கடைசி நாளாகும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் AcSIR இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: AcSIR அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

இதையும் படிங்க : ஆவடி விமானப்படை பள்ளியில் வேலைவாய்ப்பு: 10ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!
Anna University Hiroshima Centre

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹிரோஷிமா மையம் அமைக்கத் திட்டம்.. ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற பயிற்சி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com