அக்னிபத் திட்டத்தில் அதிரடி மாற்றம்.. அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு!

Agniveer Service Extension: அக்னிபத் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளது.

Published on: November 5, 2026 at 1:36 pm

புதுடெல்லி, நவ.5, 2026: மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் பணிக்காலம் முடிந்து வெளியேற வேண்டிய அக்னிவீரர்களில், ஏற்கெனவே 25 சதவீதம் பேர் தகுதி அடிப்படையில் நிரந்தரப் பணியில் சேர்க்கப்படுகின்றனர். மீதமுள்ள 75 சதவீதம் பேருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அக்னிவீரர்களின் மொத்தப் பணிக்காலம் ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்தக் கூடுதல் இரண்டு ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பிறகு, விருப்பமுள்ளவர்கள் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் ராணுவத்தின் நிரந்தரப் பணியில் சேர வாய்ப்பு வழங்கப்படும் என முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

கூடுதல் பணிக்காலத்தில் அக்னிவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிக்காலத்தில் பெற்ற பயிற்சி மற்றும் திறன்களை அங்கீகரிக்கும் வகையில் திறன் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவது கட்டாயமல்ல; நிர்ணயிக்கப்பட்ட தகுதி மற்றும் தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அக்னிபத் திட்டத்தின் கீழ், வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பணியில் சேர்க்கப்பட்டு வந்தனர். முதல் அணியைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம் வீரர்கள் இந்த ஆண்டு டிசம்பரில் பணிக்காலத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்தப் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்னிபத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com