Government School Exam Fee Ban: அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Government School Exam Fee Ban: அரசுப் பள்ளிகளில் தேர்வுக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published on: November 4, 2026 at 12:40 pm
சென்னை, நவ.4, 2026: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வு வினாத்தாள் கட்டணம் மற்றும் முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறிப்பாக, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் தேர்வு வினாத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, 2025-26ஆம் கல்வியாண்டில் நாமக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி, அதனை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் தேர்வுக் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நீட் எதிர்ப்புப் போராட்டம்.. 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்.. முதல்வர் விஜய் உத்தரவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com