அண்ணா பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம்.. ஓராண்டாக காலி!

Anna University Vacancy: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓராண்டாக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

Published on: October 27, 2026 at 12:16 pm

சென்னை, அக்.27, 2026: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (Controller of Examinations) பணியிடத்துக்கு நேரடி நியமனம் நடைபெறாமல், ஓராண்டாகக் காலியாக இருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு கடந்த ஆண்டு நேர்காணல் நடத்தப்பட்டு, தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்பட்டும் இதுவரை நியமன ஆணை வழங்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியின் பொறுப்புகள் பொறுப்பு அதிகாரி மூலம் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட நேர்காணலில் ஏழு பேர் பங்கேற்ற நிலையில், அவர்களில் ஒருவர் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நியமனம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, வினாத்தாள் தயாரித்தல், விடைத்தாள் மதிப்பீடு, மறுகூட்டல் மற்றும் பருவத் தேர்வுகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகளைக் கவனிக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளின் தேர்வு நிர்வாகத்தில் இப்பதவி முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடமும் நிரப்பப்படாமல் இருப்பது நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் நிரந்தர நியமனங்கள் தாமதமாவதால், தேர்வு நடத்துதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பேராசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலையில் பணி.. மாதம் ரூ.30,000 சம்பளம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com