திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 122 செவிலியர் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Nurse Jobs: திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையில் 122 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி. நர்சிங் படித்த 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பிக்க அக்டோபர் 26-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: October 26, 2026 at 5:57 pm

Updated on: October 26, 2026 at 6:09 pm

திருப்பூர், அக். 26 2026: தமிழகத்தில் அரசு வேலை தேடுவோருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் 122 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் செவிலியர் பட்டயப் படிப்பான ஜிஎன்எம் (GNM) அல்லது செவிலியர் இளங்கலைப் பட்டப்படிப்பான பி.எஸ்சி. நர்சிங் (B.Sc Nursing) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அச்சிட்டு, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்வாகச் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641602 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று, அக்டோபர் 26, 2026 ஆகும். எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளைச் சரிபார்த்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலையில் பணி.. மாதம் ரூ.30,000 சம்பளம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com