அதிக கல்விக் கட்டணம்.. தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட MBBS இடங்கள் காலி

MBBS Admissions: அதிக கல்விக் கட்டணம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் 800-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் காலியாக உள்ளன.

Published on: October 23, 2026 at 11:51 am

Updated on: October 23, 2026 at 11:52 am

சென்னை, அக்.23, 2026: நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான 2026-ம் ஆண்டு இறுதிக்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 800-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

மருத்துவக் கலந்தாய்வுக் குழு (MCC) தகவலின்படி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட மொத்தம் 837 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதில் 824 இடங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ளன.

இந்த இடங்கள் காலியாக இருப்பதற்கு அதிக கல்விக் கட்டணமே முக்கியக் காரணம் எனக் கல்வியாளர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பொருளாதார வசதி இல்லாத மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வியாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, அதிகக் கட்டணத்தால் தகுதியான மாணவர்கள் வாய்ப்புகளை இழப்பதாகக் குறிப்பிட்டார். மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், மாணவர்களுக்கு எளிதில் மருத்துவக் கல்வி கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. இப்படி டவுன்லோடு பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com