Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்.
Paramedical Courses: துணை மருத்துவப் படிப்புகளில் 3,878 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அவதியுற்றனர்.

Published on: October 29, 2026 at 4:00 pm
சென்னை, அக்.29, 2026: தமிழகத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டிற்கான பி.எஸ்சி. நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,878 கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு 1,100 இடங்களும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு 2,778 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், இளங்கலை உளவியல் மற்றும் மருத்துவம் மற்றும் மனநல சமூகப்பணி உள்ளிட்ட புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாம் சுற்றுக் கலந்தாய்வில் மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. முதல் கட்டத்தில் 4,064 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டத்திற்கான விருப்பத் தேர்வு பதிவு அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகமான மாணவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தியதால் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் பல மாணவர்களால் தங்களது விருப்பங்களைப் பதிவு செய்ய முடியவில்லை.
இதையடுத்து, இணையதளப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், விருப்பத் தேர்வுகளைப் பதிவு செய்து உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான விருப்பத் தேர்வு பதிவு மற்றும் உறுதிப்படுத்தும் காலக்கெடு அக்டோபர் 29ஆம் தேதி காலை 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அண்ணா பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம்.. ஓராண்டாக காலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com