என்ன பெரிய ஜெயிலர்-2.. தீபாவளி டாஸ்மாக் வசூல் தெரியுமா?

Diwali Liquor Sales in Tamil Nadu: தீபாவளிக்கு 2 நாட்களில் ரூ.441 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில், திருச்சி மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது.

Published on: November 10, 2026 at 11:59 am

சென்னை, நவ.10, 2026: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 7ஆம் தேதி ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதி ரூ.206.63 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

மண்டல வாரியான விற்பனையில் ரூ.98.97 கோடியுடன் திருச்சி மண்டலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் ரூ.95.85 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், மதுரை மண்டலம் ரூ.88.38 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சேலம் மண்டலத்தில் ரூ.87.52 கோடியும், கோயம்புத்தூர் மண்டலத்தில் ரூ.70.66 கோடியும் விற்பனையாகியுள்ளன.

தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதியும் அரசு விடுமுறை என்பதால் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையும் சேர்த்து தீபாவளிப் பண்டிகைக் கால மொத்த மது விற்பனை ரூ.633.38 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமான ஒத்துழைப்பு தொடக்கம்.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com