Tirunelveli SI Suspended: திருநெல்வேலியில், இரவு ரோந்து பணியில் பெண்ணுடன் காரில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tirunelveli SI Suspended: திருநெல்வேலியில், இரவு ரோந்து பணியில் பெண்ணுடன் காரில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Published on: November 10, 2026 at 11:48 am
திருநெல்வேலி, நவ.10, 2026: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே, இரவு ரோந்து பணியின்போது பெண்ணுடன் காரில் இருந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி (55) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஈஸ்வரமூர்த்தி, இரவு ரோந்து பணியை கவனிக்காமல், குப்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தனது சொந்த காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த தங்கராஜ் என்பவர், பணியில் இருந்த காவல் அதிகாரியின் செயலைக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உயர் காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணியில் அலட்சியமாக இருந்ததும், பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஈஸ்வரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : தேனியில் பட்டாசு வெடித்ததைத் தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு.. 3 பேர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com