சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ.க்கள்.. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை திட்டம்!

TVK MLAs Disciplinary Action: சர்ச்சையில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: November 10, 2026 at 12:21 pm

சென்னை, நவ.10, 2026: தமிழகத்தில் ஆளும் தவெகவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சர்ச்சைகள் அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, சட்டப்பேரவை துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி. அருள் விக்னேஷ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பைகள் தேங்குவது குறித்து புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தன்னை மிரட்டி தாக்குதல் நடைபெறவில்லை எனக் கூறும் வீடியோவைப் பதிவு செய்ய வைத்ததாகவும் அந்த நபர் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு புறம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டிற்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் அரசு உயர் அதிகாரிகள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தவெகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் இருவர் மீதான புகார்களையும் விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் என். ஆனந்த், சி. விஜயலட்சுமி ஆகியோர் விசாரணையை நடத்துவார்கள் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரவிசங்கரிடம் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யக் கோரவும் கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி.. த.வெ.க எம்.எல்.ஏ-வுக்கு கனிமொழி கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com