Vettri Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி’ மடிக்கணினி திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Vettri Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி’ மடிக்கணினி திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Published on: November 7, 2026 at 6:25 pm
சென்னை, நவ.7, 2026: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் நோக்கில், ‘வெற்றி மடிக்கணினி திட்டத்தை’ செயல்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம், வேளாண்மை மற்றும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர்.
மேலும், 2025-26ஆம் கல்வியாண்டில் மடிக்கணினி திட்டத்தில் பயனடையாத அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு இன்டெல் கோர் ஐ5 அல்லது அதற்கு இணையான தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், தரமான மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதற்குத் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு (ELCOT) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com