தமிழகத்தில் ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

Tamil Nadu Road Projects 2026: தமிழகத்தில் ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

Published on: November 19, 2026 at 11:24 am

சென்னை, நவ.19, 2026: தமிழகம் முழுவதும் 4,126.39 கி.மீ. தொலைவுக்கு 2,221 சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.6,513.18 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. 2026-27ஆம் நிதியாண்டுக்கான விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதில் மாநில நெடுஞ்சாலைகளில் 589 பணிகளுக்கு ரூ.2,722.04 கோடியும், முக்கிய மாவட்டச் சாலைகளில் 419 பணிகளுக்கு ரூ.1,009.67 கோடியும், இதர மாவட்டச் சாலைகளில் 1,213 பணிகளுக்கு ரூ.2,781.47 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்புத் திட்டத்தின் கீழ் மேலும் 87 பணிகள் ரூ.304.76 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

கிராமப்புறச் சாலைகளை அகலப்படுத்த 446 பணிகளுக்கு ரூ.1,924.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகாசி வெளிவட்டச் சாலை, பள்ளிகொண்டா புறவழிச்சாலை, மன்னார்குடி சுற்றுச்சாலை உள்ளிட்ட திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சென்னையில் ராஜீவ் காந்தி சாலை (OMR) திருப்போரூர் அருகே 2.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த விபத்து தடுப்புகள், சந்திப்பு மேம்பாடு, அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட 588 பணிகளுக்கு ரூ.232.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்மட்டப் பாலங்கள், சிறுபாலங்கள், வடிகால்கள் மற்றும் சாலைகளை வலுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தங்கம் விலை அதிரடி சரிவு.. ஒரு பவுன் ரூ.95,840!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com