DMK District Restructuring 2026: திமுகவில் 110 அமைப்பு மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
DMK District Restructuring 2026: திமுகவில் 110 அமைப்பு மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

Published on: November 19, 2026 at 11:51 am
சென்னை, நவ.19, 2026: திமுகவில் அமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் சமூகக் கட்டமைப்பு அடிப்படையில் மாற்றங்களை மேற்கொள்ள கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
திமுகவில் இதுவரை 15 முறை அமைப்புத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், 16-ஆவது முறையாக உள்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஏற்கெனவே இருந்த 77 அமைப்பு மாவட்டங்கள் 110 ஆக உயர்த்தப்பட்டன.
ஆனால், புதிய மாவட்டங்களுக்கான தொகுதிப் பிரிவுகள் முறையாக இல்லை என்றும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே மாவட்டச் செயலர் பதவி கிடைக்கும் வகையில் பட்டியல் அமைந்துள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், மாவட்டச் செயலர் பதவிக்கு 70 வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
இதையடுத்து, திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சி முன்னோடிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய மாவட்டப் பட்டியலை விரைவில் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக ரேஷன் கடைக்காக காத்திருக்கும் பெரம்பூர் மக்கள்.. எப்போது விடிவுகாலம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com