சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன்: சிந்து விலகல்; இந்திய நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு!

PV Sindhu: சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், சிந்து விலகியுள்ளார். இதனால், இந்திய நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Published on: November 20, 2026 at 2:18 pm

புதுடெல்லி, நவ.20, 2026: சையத் மோடி இந்தியா சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நவம்பர் 24 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிடபிள்யூஎப் சூப்பர் 300 அந்தஸ்து கொண்ட இந்தத் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து விலகியுள்ளார். இதனால் இந்தியாவின் இளம் வீராங்கனைகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் மூன்றாம் நிலை வீரராகக் களமிறங்குகிறார். இவருடன் கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத், தருண் மன்னேபள்ளி உள்ளிட்ட இந்திய வீரர்களும் பட்டத்துக்காகப் போட்டியிட உள்ளனர். சிங்கப்பூரின் ஜேசன் டெ முன்னணி வீரராகக் களமிறங்குகிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனைகள் தன்வி சர்மா இரண்டாம் நிலை வீராங்கனையாகவும், உன்னதி ஹூடா மூன்றாம் நிலை வீராங்கனையாகவும் களமிறங்குகின்றனர். அஸ்மிதா சாலிஹா, தேவிகா சிஹாக், இஷாராணி பருவா ஆகியோரும் இந்திய அணியின் நம்பிக்கையாக உள்ளனர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி முக்கிய பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள ஜோடியாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்த ஜோடி, மீண்டும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. மொத்தம் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்தத் தொடரில் இந்திய வீரர்களுக்கு சர்வதேச தரவரிசைப் புள்ளிகளைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க : TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம்!

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு அங்கீகாரம்!
TIME100 Indian Sports Stars

TIME100 பட்டியலில் 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள்.. வைபவ், ஹர்மன்பிரீத், லவ்லினா உள்ளிட்டோருக்கு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com