பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பாதியில் கைவிடுவது எப்படி? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Parandur Airport Project Hearing: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பாதியில் கைவிடுவது எப்படி? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

Published on: November 20, 2026 at 2:25 pm

சென்னை, நவ.20, 2026: பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தைக் கைவிட தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அரசின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தைப் பாதியில் கைவிடுவது எப்படி என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியைச் சமாளிக்க பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.680 கோடி அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், திட்டத்துக்குத் தேவையான நிலங்களில் 48 சதவீதம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதால், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், நிபுணர் குழு அறிக்கைகள் மற்றும் பொருளாதார ஆய்வுகள் இல்லாமல் திட்டத்தைக் கைவிட்டது சட்டவிரோதமானது எனக் கூறி மென்பொறியாளர் கவுதமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும், திட்டத்தைக் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்யவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசின் விளக்கங்கள் மற்றும் திட்டத்தைக் கைவிட்டதற்கான காரணங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : கௌத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல் இன்று தகனம்.. முழு விவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com