VS Babu Funeral : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
VS Babu Funeral : கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

Published on: November 20, 2026 at 1:49 pm
சென்னை, நவ.20, 2026: உடல்நலக்குறைவு காரணமாக காலமான கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல் இன்று (நவம்பர் 20) மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச்சடங்கு பல்லவன் சாலையில் உள்ள இடுகாட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
75 வயதான வி.எஸ்.பாபு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், அருகிலுள்ள தனியார் விளையாட்டு மைதானத்திலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மு.க.ஸ்டாலினை தோற்கடித்த கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மரணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com