108 Ambulance Workers Demand: ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “108 அவசர ஊர்தி பணியாளர்களை உடனே அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
108 Ambulance Workers Demand: ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “108 அவசர ஊர்தி பணியாளர்களை உடனே அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Published on: November 20, 2026 at 1:44 pm
சென்னை, நவ.20, 2026: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவ.20, 2026) விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அவசர மருத்துவ சேவை வழங்குவதற்கான 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டத்தில் பணியாற்றி வரும் 7500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம், ஊதிய உயர்வு ஆகியவையும், பணிப்பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். கால நேரம் பார்க்காமல் மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 108 அவசர சேவை பணியாளர்களுக்கு வாழ்வாதார உத்தரவாதம் கூட வழங்கப்படாதது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம், ஹரியானா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 108 அவசர ஊர்தி சேவையை மாநில அரசின் சுகாதார சேவைகள் துறைகளே கவனித்துக் கொள்கின்றன. அங்கு பணியாற்றும் 108 சேவை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியமும், பிற உரிமைகளும் வழங்கப்படுகின்றன. 108 சேவையை அரசே வழங்கும் போது அதன் பணியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்கும் போது, அந்த முறையை தமிழ்நாட்டில் கடைபிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இந்தியாவில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்கு முன்பாக 1994-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தொடங்கப்பட்டது. அந்த கழகத்தின் வாயிலாகவே 108 அவசர ஊர்தி சேவைகளை மிகவும் சிறப்பாக வழங்க முடியும். அதன் மூலம் தொழிலாளர்களுக்கும் நியாயமான ஊதியம் மற்றும் உரிமைகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
எனவே, தமிழ்நாட்டில் உயிர்காக்கும் 108 அவசர ஊர்தி சேவையை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் வாயிலாக அரசே ஏற்று நடத்த வேண்டும். 108 அவசர ஊர்திச் சேவைத் திட்டத்தில் பணியாற்றி வரும் 7500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பதுடன், அவர்களின் பிற நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :கூட்டாட்சித் தத்துவம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.. குரியன் ஜோசப் குழுவின் முக்கியத்துவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com