Annapoorni Super 6 Scheme: பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகையைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பங்களைத் தேர்வு செய்யத் தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.
Annapoorni Super 6 Scheme: பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகையைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தின் கீழ், தகுதியான குடும்பங்களைத் தேர்வு செய்யத் தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.

Published on: November 22, 2026 at 3:24 pm
சென்னை, நவ.22, 2026: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தொகையை வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பயனாளிகள் தேர்வுப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள குடும்பங்கள், அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெறும் பெண்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருமானம் கொண்ட குடும்பங்கள் தொடர்பான விவரங்களை அரசு பரிசீலித்து வருகிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சுமார் 2.40 கோடி வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகள் உள்ளன. அவற்றில் சுமார் 1.10 கோடி இணைப்புகள் ஒற்றை சிலிண்டர் இணைப்புகளாகும். இதில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 42 லட்சம் இணைப்புகளும் அடங்கும். மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் எரிவாயு இணைப்பை வழங்கும் நிலையில், தமிழக அரசின் புதிய திட்டம் சிலிண்டர் நிரப்புவதற்கான செலவை ஈடுசெய்யும் வகையில் அமைய உள்ளது.
பயனாளிகள் வழக்கம்போல் சிலிண்டரை முன்பதிவு செய்து பெற்றுக்கொண்ட பிறகு, அதற்கான தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இருப்பினும், பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான இறுதி நடைமுறைகள், முதல் தவணைத் தொகை செலுத்தப்படும் நாள் மற்றும் ஆண்டில் மூன்று முறை தொகை வழங்கப்படும் கால அட்டவணை ஆகியவற்றை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க : குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 9 அடி முதலை: தாக்குதலில் ஒருவர் படுகாயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com