ஆழ்வார்திருநகரியில் கோலாகலமாக நடைபெற்ற கைசிக ஏகாதசி கருட சேவை!

Kaisika Ekadasi Garuda Seva: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு கைசிக புராணம் வாசித்தல் மற்றும் கருட சேவை சிறப்பாக நடைபெற்றது.

Published on: November 22, 2026 at 3:01 pm

தூத்துக்குடி, நவ.22, 2026: தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை முன்னிட்டு கைசிக புராணம் வாசித்தல் மற்றும் கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு விஸ்வரூபமும், 8 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றன.

தொடர்ந்து, அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்த பாலாஜி ஸ்வாமி அழைத்து வரப்பட்டு, பெரிய பெருமாள் ஆதிநாதர் சன்னதியில் கைசிக புராணம் வாசிக்கப்பட்டது. திருக்குறுங்குடி நம்பி சன்னதியில் விரதமிருந்து இசையுடன் பாடல்கள் பாடிய நம்பாடுவானின் கதையே கைசிக புராணமாகும். இதனை பாலாஜி ஸ்வாமி வாசித்தார். பின்னர் பக்தர்களுக்குத் தீர்த்தம், சடாரி பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு இரவு 7.45 மணிக்கு பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். தொடர்ந்து மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாக அதிகாரிகள், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சபரிமலைக்கு ஜனவரி 17 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!
Hethai Amman Festival Celebration

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com