V.S. Babu Funeral: மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலை, முதல்-அமைச்சர் விஜய் அவரது உறவினர்களுடன் இணைந்து தோளில் சுமந்து சென்றார்.
V.S. Babu Funeral: மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடலை, முதல்-அமைச்சர் விஜய் அவரது உறவினர்களுடன் இணைந்து தோளில் சுமந்து சென்றார்.

Published on: November 20, 2026 at 6:25 pm
சென்னை, நவ.20, 2026: தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு (75). உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து அவரது உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் மாலை 6.40 மணியளவில் வி.எஸ்.பாபுவின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விஜய், வி.எஸ்.பாபுவின் உறவினர்களுடன் இணைந்து அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்றார்.
வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தின்போது வி.எஸ்.பாபுவின் மகனை அரவணைத்தபடி முதல்-அமைச்சர் விஜய் நடந்து சென்றார். அவரது உடல் சென்னை திரு.வி.க.நகர் தாங்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க : “காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com