“காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” – தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Cauvery Water Dispute Hearing: “காவிரி விவகாரத்தில் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வினாயெழுப்பியுள்ளது.

Published on: November 20, 2026 at 2:42 pm

புதுடெல்லி, நவ.20, 2026: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், “காவிரி விவகாரத்தில் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்வீர்கள்?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி, தமிழகத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அக்டோபர் 24 முதல் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு 12 ஆயிரம் கனஅடிக்குப் பதிலாக சராசரியாக 8,149 கனஅடி நீர் மட்டுமே கிடைத்ததாக தமிழக அரசு குற்றம்சாட்டியது.

இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும், இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதி, புதிய மனுவை விசாரிக்கக் கோரினார். இதையடுத்து, புதிய இடைக்கால மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் தொடர்ந்து மனுக்கள் தாக்கல் செய்வது குறித்தும் கேள்வி எழுப்பினர் .

இதையும் படிங்க : பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பாதியில் கைவிடுவது எப்படி? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com