Cauvery Delta Drought Demand: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Cauvery Delta Drought Demand: காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: November 22, 2026 at 11:56 am
சென்னை, நவ.22, 2026: காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் சம்பா, தாளடி நெற்பயிர்கள் வாடத் தொடங்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைக் காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக 18 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக சம்பா, தாளடி சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சுமார் 7 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்குப் பருவமழையும் பெய்யாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பா பயிர்களைக் காப்பாற்ற சில விவசாயிகள் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி வயல்களுக்குப் பாய்ச்சி வருகின்றனர். வசதியில்லாத விவசாயிகள் அருகிலுள்ள நீர்நிலைகளிலிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து 70 முதல் 80 நாட்களுக்கு இதே முறையில் தண்ணீர் வழங்குவது சாத்தியமில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்துள்ள நிலையில், பயிர்கள் கருகினால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திப்பார்கள். ஏற்கெனவே கடன் சுமையில் உள்ள விவசாயிகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து அதிகாரிகள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்குவதுடன், நிலவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ரத்து செய்து, விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 108 அவசர ஊர்தி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com