PF Withdrawal Rules Change: பி.எஃப் பணம் எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன; அதன்படி, 90 சதவீதம் வரை பணம் பெறலாம்; வேலையிழந்தால் 2 மாதங்களில் இறுதித் தொகை கிடைக்கும்.
PF Withdrawal Rules Change: பி.எஃப் பணம் எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன; அதன்படி, 90 சதவீதம் வரை பணம் பெறலாம்; வேலையிழந்தால் 2 மாதங்களில் இறுதித் தொகை கிடைக்கும்.

Published on: November 22, 2026 at 12:29 pm
சென்னை, நவ.22, 2026: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (EPFO), பி.எப். பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, உறுப்பினர்கள் தங்களது பி.எப். சேமிப்பில் இருந்து பகுதியளவு 90 சதவீதம் வரை பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு குறைந்தபட்சம் 25 சதவீதத் தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டிய நிலையில், தற்போது அது 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலையை இழந்து வேலையில்லாமல் இருப்பவர்கள் முழுமையான பி.எப். தொகையைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையிழந்தவர்கள் மற்றும் வேலை மாறுவதற்கு இடையில் நீண்ட இடைவெளி ஏற்படுபவர்கள் பயனடைவார்கள்.
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு புதிய முறையாக சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (SWP) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, பி.எப். சேமிப்பை மொத்தமாக ஒரே நேரத்தில் பெறுவதற்குப் பதிலாக மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை தவணைகளாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும். இந்த வசதி விருப்பத்தின் அடிப்படையிலானது.
இந்த மாற்றங்களுக்கு நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய விதிகள் நடைமுறைக்கு வர தொழிலாளர் அமைச்சகத்தின் முறையான அறிவிப்பு மற்றும் தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, புதிய வசதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
இதையும் படிங்க : டிவிஎஸ் குடும்பச் சொத்து தகராறு: வாரிசுரிமை, பாலின சமத்துவம் குறித்து எழும் கேள்விகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com