Monthly PF Pension Scheme: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது; மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்.
Monthly PF Pension Scheme: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது; மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்.

Published on: November 20, 2026 at 12:02 pm
புதுடெல்லி, நவ.20, 2026: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (EPFO), ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது பிஎப் (PF) சேமிப்புத் தொகையை ஒரே தவணையாகப் பெறுவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணைகளாகப் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ‘சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான்’ (SWP) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற EPFO மத்திய அறங்காவலர் குழுவின் 240-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாதந்தோறும், 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை பிஎப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுக்காமல் மீதமுள்ள பணத்தை பிஎப் கணக்கிலேயே வைத்திருக்க முடியும். அந்தத் தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைப்பதால், ஓய்வுக்குப் பிறகும் நிலையான வருமானம் பெறுவதற்கு இந்தத் திட்டம் உதவும். இந்த வசதியைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை; விருப்பத்தின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படும்.
தொடக்கக் கட்டத்தில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பிஎப் சேமிப்பைக் கொண்டவர்களாகவும் உள்ள சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குறைந்தபட்ச பிஎப் இருப்புத் தொகையை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும், இறுதிப் பணத்தைப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழகத்தில் ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்.. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com