Marital Rape Case Hearing: திருமண உறவில் பாலியல் வன்கொடுமை வழக்கில், டிசம்பரில் இறுதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Marital Rape Case Hearing: திருமண உறவில் பாலியல் வன்கொடுமை வழக்கில், டிசம்பரில் இறுதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Published on: November 20, 2026 at 11:41 am
புதுடெல்லி, நவ.20, 2026: மனைவியின் விருப்பமின்றி கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படுமா என்பது தொடர்பான வழக்குகளை டிசம்பர் மாதம் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மனுக்கள் மீது டிசம்பர் 9 அல்லது 10-ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 63-வது பிரிவின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவர் மேற்கொள்ளும் பாலியல் உறவு, மனைவியின் சம்மதம் இல்லாவிட்டாலும் பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது. இந்தச் சட்டப்பிரிவுக்கு எதிராகப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், கணவர் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டால் அவருக்கு அளிக்கப்படும் சட்டப் பாதுகாப்பு அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா? அந்தப் பாதுகாப்பு தொடர்ந்தால் கணவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பது உள்ளிட்ட முக்கியமான கேள்விகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசும் தனது பதில் மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, 2022-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. திருமண உறவில் பாலியல் வன்கொடுமைக்கு விலக்கு அளிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என ஒரு நீதிபதியும், அது அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என மற்றொரு நீதிபதியும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் 5 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த யானை? இவ்வளவு பிரமாண்ட தாடையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com