Rohingya Muslims Massacre: மியான்மரில் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Rohingya Muslims Massacre: மியான்மரில் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Published on: November 20, 2026 at 11:20 am
தி ஹேக், நவ.20, 2026: நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ), மியான்மரில் 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றதாக அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்த நடவடிக்கையில் சுமார் 10,000 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், 7.30 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா மக்கள் உயிர் தப்புவதற்காக அண்டை நாடான வங்கதேசத்துக்கு அகதிகளாகச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா, 2019-ம் ஆண்டு மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 1948-ம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு 9-6 என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பான தாயகம் திரும்புதலை உறுதி செய்யவும், குடும்பங்களை ஒன்றிணைக்கவும் மியான்மருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஒரு நாட்டின் மீது இனப்படுகொலைக்கான பொறுப்பை சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சவூதி அரேபியாவுக்கு நவ.30 வரை விமான சேவை ரத்து.. இண்டிகோ அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com