அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்கள்.. தமிழ்நாடு அரசு

Nursing Vacancies: தமிழக அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Published on: November 20, 2026 at 10:42 am

சென்னை, நவ.20, 2026: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக 1,695 செவிலியர் பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.42.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நவம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட்டது.

2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதன் மூலம் செவிலியர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளாக செவிலியர் பணியிடங்களுக்கு முறையான ஆட்சேர்ப்பு நடைபெறாததால், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை நிலவி வந்ததாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே கடந்த மாதம் மாவட்ட சுகாதாரச் சங்கங்கள் மூலம் தகுதி அடிப்படையில் 4,724 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும், மருத்துவத்துறையின் மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் 7 புதிய செவிலியர் கல்லூரிகளில் 2,585 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டு, நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் முடிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : கிராமப்புறங்களில் 3,941 குடிநீர் தொட்டி இயக்குநர் பணியிடங்கள்.. தமிழக அரசு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
National Banana Research Institute

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி. படித்தவர்கள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com