வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: காவல் நிலையம், எம்.பி. வீடு தீக்கிரை

Bangladesh Violence: வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன; காவல் நிலையம், எம்.பி. வீடு தீக்கிரை.

Published on: November 18, 2026 at 12:36 pm

டாக்கா, நவ.18, 2026: வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொந்த ஊரான கோபால்கஞ்ச் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. உள்ளூர் அரசியல் தலைவரின் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது.

ஃபரித்பூர் மாவட்டத்தின் பங்கா பகுதியில், காவல்துறையினருக்கும் ஷேக் ஹசீனாவின் கலைக்கப்பட்ட அவாமி லீக் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) விவசாயிகள் அணியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ராஜு மொல்லா கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கோபால்கஞ்சின் துங்கிபாரா பகுதியில் வன்முறை பரவியது.

வன்முறையின்போது காவல் நிலையம், உள்ளூர் BNP அலுவலகம், பல மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டன. BNP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். ஜிலானியின் வீட்டையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

தலைநகர் டாக்காவிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், நாட்டு முழுவதும் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து பதற்றம் அதிகரித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் மூலம் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பெற்றோர் சந்தித்த உணவகத்துக்கு காதலியுடன் சென்ற ராகுல் காந்தி.. சுவாரஸ்ய அனுபவம் பகிர்வு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com