சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள்.. முழு விவரம்!

Sabarimala Pilgrims Bus Service: சபரிமலை பக்தர்களுக்காக விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published on: November 22, 2026 at 3:33 pm

திருவனந்தபுரம், நவ.22, 2026: சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு நேரடி ஏசி பேருந்து சேவையை கேரள அரசு போக்குவரத்துக் கழகம் (KSRTC) தொடங்கியுள்ளது. இதனை கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.ஜான் தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பம்பைக்குச் செல்ல ரூ.340-ம், கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து செல்ல ரூ.380-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் மண்டல – மகரவிளக்கு யாத்திரைக் காலம் முழுவதும் இயக்கப்படும். திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கும், கொச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கும் பேருந்துகள் புறப்படும். விமானத்தில் வரும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யும் மற்ற பயணிகளும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு விமான நிலையங்களிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கான சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்கள் தங்கள் வீடுகள் அல்லது கோவில்களுக்கு அருகிலிருந்தே பம்பைக்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகளை முன்பதிவு செய்யும் வசதியையும் KSRTC அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர்கள், குடும்பத்தினர் மற்றும் குழுவினர் தங்களது பயணத் தேதி, நேரம், ஏறும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பேருந்துகளை முன்பதிவு செய்யலாம். KSRTC இணையதளம் மற்றும் விமானப் பயண முன்பதிவுத் தளங்கள் வழியாகவும் டிக்கெட் பதிவு செய்யலாம்.

இதையும் படிங்க : ஆழ்வார்திருநகரியில் கோலாகலமாக நடைபெற்ற கைசிக ஏகாதசி கருட சேவை!

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!
Hethai Amman Festival Celebration

நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா கோலாகலம்: பாரம்பரிய நடனம், பாடல்களுடன் பக்தர்கள் உற்சாகம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com