Vladimir Putin: இந்தியாவின் கலாசாரமும் மொழிப் பன்முகத்தன்மையும் வியக்க வைக்கின்றன என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
Vladimir Putin: இந்தியாவின் கலாசாரமும் மொழிப் பன்முகத்தன்மையும் வியக்க வைக்கின்றன என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

Published on: November 23, 2026 at 3:52 pm
மாஸ்கோ, நவ.23, 2026: இந்தியாவின் பழமையான நாகரிகம் மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மை தன்னை வியக்க வைப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக்கிற்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை குறித்தும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியபோது, இந்தியாவில் முக்கிய மொழியைப் பேசுபவர்கள் எத்தனை பேர் என்று கேட்டதாக புதின் குறிப்பிட்டார். அதற்கு சுமார் 60 கோடி பேர் என்று மோடி பதிலளித்ததாகவும், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் 150 கோடி என்று தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதன்படி, இந்திய மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே முக்கிய மொழியைப் பேசுவதாகவும், மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கினர் தங்களது சொந்த மொழிகளைப் பேசுவதாகவும் புதின் சுட்டிக்காட்டினார். இத்தகைய மொழிப் பன்முகத்தன்மை வியப்பளிப்பதாகவும், இந்திய நாகரிகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளும்போது தனது ஆர்வம் அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரஷ்யாவிலும் பல்வேறு இனங்கள் தங்களது மதம், பாரம்பரியம், மொழி மற்றும் ஆன்மிக அடையாளங்களைப் பாதுகாத்து வாழ்வதாக புதின் குறிப்பிட்டார். பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளைக் கொண்ட மக்கள் ஒரே நாட்டில் இணைந்து வாழ்வது இந்தியா மற்றும் ரஷ்ய நாகரிகங்களின் சிறப்பம்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மியான்மரில் 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை.. சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com