ரூ.11,000 பி.எஃப். பணத்தில் தொடங்கி ரூ.22,139 கோடி பாதுகாப்புத் துறை நிறுவனம்.. சென்னை ஸ்ரீனிவாசகோபாலன் வெற்றிக்கதை!

₹11,000 PF Investment Success: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசகோபாலன் ரங்கராஜன், தனது வருங்கால வைப்பு நிதியில் (PF) இருந்து பெற்ற ரூ.11,000-ஐ முதலீடாகக் கொண்டு தொடங்கிய நிறுவனம் இன்று ரூ.22,139 கோடி மதிப்பை எட்டியுள்ளது.

Published on: November 23, 2026 at 2:00 pm

சென்னை, நவ.23, 2026: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசகோபாலன் ரங்கராஜன், தனது வருங்கால வைப்பு நிதியில் (PF) இருந்து பெற்ற ரூ.11,000-ஐ முதலீடாகக் கொண்டு தொடங்கிய நிறுவனம் இன்று ரூ.22,139 கோடி மதிப்பை எட்டியுள்ளது. 1985-ம் ஆண்டு தனது 27-வது வயதில் மயிலாப்பூரில் சிறிய அளவில் ஆய்வகக் கருவிகள் தயாரிப்பைத் தொடங்கிய அவர், பின்னர் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் தடம் பதித்தார்.

ரங்கராஜன் தொடங்கிய ‘டேட்டா பேட்டர்ன்ஸ்’ நிறுவனம் ஆரம்பத்தில் தானியங்கி ஆய்வகக் கருவிகள் மற்றும் கணினிகளுக்கான உதிரி சாதனங்களைத் தயாரித்தது. பின்னர் இஸ்ரோவுக்குத் தேவையான வழிகாட்டி சாதனங்கள் மற்றும் விமான மின்னணுவியல் கருவிகளைச் சோதிக்கும் உபகரணங்களை உருவாக்கியது. இதன் மூலம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

2001-ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரம்மோஸ் ஏவுகணை ஏவுதளத்துக்கான கட்டுப்பாட்டு அமைப்பைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை டேட்டா பேட்டர்ன்ஸ் பெற்றது. மேலும், டி.ஆர்.டி.ஓ. மற்றும் இஸ்ரோவுக்கான முக்கியத் தொழில்நுட்பக் கருவிகளையும் தயாரித்தது. தொடர்ந்து ரேடார், மின்னணுப் போர் சாதனங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை உபகரணங்களை உருவாக்கும் நிறுவனமாக வளர்ந்தது.

2021-ம் ஆண்டு நிறுவனத்தின் பங்குகள் பொதுப் பங்குச் சந்தையில் அறிமுகமானபோது, ரூ.588 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.50,000 கோடிக்கான விண்ணப்பங்கள் கிடைத்தன. 2026-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.925 கோடியாகவும், நிகர லாபம் ரூ.271 கோடியாகவும் இருந்தது. நவம்பர் 9, 2026 நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.22,139 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com