வெளிநாட்டுக்குச் சென்று சிலர் இந்தியாவை அவமதிக்கிறார்கள்.. ராகுல் குறித்து நிதின் நபின்!

Nitin Nabin Slams Rahul Gandhi: வெளிநாட்டுக்குச் சென்று இந்தியாவை அவமதிக்கிறார்கள் என ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் நிதின் நபின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published on: November 23, 2026 at 2:56 pm

புதுடெல்லி, நவ.23, 2026: அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வித்துறையில் பெரும் பிரச்சினைகள் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிதின் நபின், இந்தியாவின் வளர்ச்சியால் அதிருப்தி அடைந்த சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டை அவமதிப்பதாகக் குற்றம்சாட்டினார். 140 கோடி இந்தியர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வரும் நிலையில், இந்தியப் பொருளாதாரத்தைப் பேரழிவு நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி கூறுவது தவறானது என்றும் விமர்சித்தார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நேரடி வங்கிப் பணப் பரிமாற்ற முறையை நிதின் நபின் பாராட்டினார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசின் நிதியில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே ஏழைகளைச் சென்றடைந்ததாக ராஜீவ் காந்தி கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது முழுத் தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தித் துறை மற்றும் கல்வி அமைப்பில் அடிப்படைப் பிரச்சினைகள் இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது அமெரிக்க உரையில் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துகளுக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான அரசியல் விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க : டாவூத் இப்ராஹிம் கூட்டாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை.. உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு!

நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்; வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.. பிரதமர் மோடி
Naxal Violence Impact

நக்சல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்; வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டது.. பிரதமர் மோடி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com