Syed Modi Badminton : சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா – தன்வி சர்மா மோதுகின்றனர்.
Syed Modi Badminton : சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா – தன்வி சர்மா மோதுகின்றனர்.

Published on: November 28, 2026 at 6:40 pm
புதுடெல்லி, நவ.28, 2026: லக்னோவில் நடைபெற்று வரும் சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனைகள் உன்னதி ஹூடா, தன்வி சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர். இதன் மூலம் அரையிறுதியில் இருவரும் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ளது. இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு இறுதிப்போட்டியாளர் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
காலிறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான தன்வி சர்மா, இந்தோனேசியாவின் நி கடெக் திந்தா அமர்த்யா பிரதிவதியை 21-19, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இரண்டாவது செட்டை இழந்தாலும் மூன்றாவது செட்டில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் மூன்றாம் நிலை வீராங்கனையான உன்னதி ஹூடா, இந்தியாவின் அன்மோல் கர்பை 21-19, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். ஒரு மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சையத் மோடி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதற்கிடையில், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை, பிரான்ஸ் ஜோடி விலகியதால் ஆட்டம் இன்றி அரையிறுதிக்கு முன்னேறியது. கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் ரெட்டி கனபுரம் – ரேஷிகா உதயசூரியன் இணையும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதையும் படிங்க : இரண்டாவது புதிய பந்தில் பும்ரா அச்சுறுத்தலாக இல்லை: சுனில் கவாஸ்கர் கருத்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com