3-வது செஸ் போட்டியில் குகேஷ் சிறப்பான ஆட்டம்.. சிந்தாரோவ் ஒப்புதல்!

Gukesh Chess Match Praise:3-வது செஸ் போட்டியில் குகேஷின் தயார் நிலை சிறப்பாக இருந்தது என சிந்தாரோவ் ஒப்புக்கொண்டார்.

Published on: November 27, 2026 at 1:37 pm

சென்னை, நவ.27, 2026: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷின் ஆட்டத்திற்கான முன்தயாரிப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக உஸ்பெகிஸ்தான் வீரர் ஜாவோகிர் சிந்தாரோவ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற இந்த ஆட்டம் 60 நகர்த்தல்களுக்குப் பிறகு டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், பெர்லின் டிபென்ஸ் முறையில் புதிய நகர்த்தலைப் பயன்படுத்தினார். இதற்கு சிந்தாரோவ் எதிர்பார்த்த அளவுக்கு முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை. இதனால் தொடக்கத்திலேயே அவர் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய சிந்தாரோவ், குகேஷ் 15-வது நகர்த்தல் வரை சிறப்பாகத் தயாராக இருந்ததாகவும், அவரது ஆட்டத்தால் தான் ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். இறுதிக்கட்டத்தில் நேர நெருக்கடி ஏற்பட்டபோதும் சிறப்பாகத் தற்காத்து ஆட்டத்தை டிராவில் முடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

மூன்று ஆட்டங்களின் முடிவில் இரு வீரர்களும் தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். முதல் ஓய்வு நாளுக்குப் பிறகு 4-வது ஆட்டம் நவம்பர் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குகேஷ் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க :‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம்: வீரர்களுக்கு மீண்டும் தண்டனை இல்லை.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு!

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம்: வீரர்களுக்கு மீண்டும் தண்டனை இல்லை.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு!
Australian Cricket Controversy

‘சாண்ட்பேப்பர்கேட்’ விவகாரம்: வீரர்களுக்கு மீண்டும் தண்டனை இல்லை.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com