5 மொழிகளில் வராஹி அம்மன்.. உருவாகும் பிரமாண்ட புராணக் கதை!

Varahi Amman Multilingual Film: வராஹி அம்மனை மையமாகக் கொண்டு 5 மொழிகளில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

Published on: November 27, 2026 at 1:45 pm

சென்னை, நவ.27, 2026: இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் வராஹி அம்மனின் பெருமைகளை மையமாகக் கொண்டு புதிய பக்தித் திரைப்படம் உருவாக உள்ளது. வி.கே.வி. பிக்சர்ஸ் மற்றும் ஸ்டெல்லார்கிராஃப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. வி.கே.வி. பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜே. மற்றும் சந்திரசேகரன் வி.எம். ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்டெல்லார்கிராஃப்ட் ஸ்டுடியோஸ் சார்பில் பாலசுப்பிரமணியமும், அயர்லாந்தைச் சேர்ந்த பாலாஜி கண்ணியப்பனும் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

‘எக்கோ’, ‘பல்ஸ்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய நவீன் கணேஷ், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கப் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். புராணக் கதைகளுடன் நவீனத் திரைப்படத் தொழில்நுட்பத்தை இணைத்து பிரம்மாண்டமான பக்தித் திரைப்படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் காட்சிகளை சென்னையைச் சேர்ந்த பிக்ஸார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. தற்போது படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, கதாநாயகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’.. முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசிய ராஜ் பி. ஷெட்டி!

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24 மணி நேரத்தில் 56.3 கோடி பார்வைகளா!
Avengers Doomsday Trailer Record

டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிரெய்லர்.. அடேங்கப்பா.. 24

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!
Rajinikanth Murattu Kaalai Re-Release

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com