விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’.. முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசிய ராஜ் பி. ஷெட்டி!

Raj B. Shetty Tamil Debut: விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளார் ராஜ் பி. ஷெட்டி.

Published on: November 27, 2026 at 1:26 pm

சென்னை, நவ.27, 2026: இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் முதல் முறையாகத் தனது கதாபாத்திரத்திற்கு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன், கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தியாகராஜன் குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

பொங்கல் வெளியீடாக வரும் 2027 ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : ஜெய்பீம் மணிகண்டன் மாறுபட்ட நடிப்பில் மக்கள் காவலன். டிச.4 ரிலீஸ்!

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!
Rajinikanth Murattu Kaalai Re-Release

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் பாராட்டிய அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
Tom Hanks Praises Sachana

அந்தப் பெண்ணின் நடிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.. ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com