காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.. 8 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

Gaza Israeli Airstrikes: காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 8 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

Published on: November 27, 2026 at 1:17 pm

காஸா, நவ.27, 2026: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் காசா நகரம் மற்றும் மத்திய காசா பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

மத்திய காசாவின் டெய்ர் அல்-பலா நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காசா நகரில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கல்வித்துறை விவகாரங்களைக் கவனித்து வந்த காலித் அபு நாடா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் குறிவைக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் இதுவரை 74,746 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 35% வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டம்: சீனாவுக்கு 40% வரை வரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com