அமெரிக்க கழுதை ஹோப் படைத்த அபூர்வ சாதனை.. 2-வது முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்

Guinness World Record: அமெரிக்காவைச் சேர்ந்த ஹோப் என்ற பெண் கழுதை, உலகிலேயே மிக நீளமான வாலைக் கொண்ட கழுதை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. ஏற்கெனவே ஒரு சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Published on: November 26, 2026 at 1:13 pm

வாஷிங்டன், நவ.26, 2026: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் பைரன் நகரில் உள்ள ப்ராஸ்ட் பண்ணையில் வளர்க்கப்படும் ஹோப் என்ற பெண் கழுதை இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 11-ம் தேதி கால்நடை மருத்துவர்கள் மற்றும் சுயாதீன சாட்சிகள் முன்னிலையில் அதன் வால் அளவிடப்பட்டது. அப்போது 50.73 சென்டிமீட்டர் (19.97 அங்குலம்) நீளம் கொண்டதாகப் பதிவானது. சுமார் 2 மாத ஆய்வுக்குப் பிறகு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

‘அமெரிக்கன் மம்மத் ஜாக்ஸ்டாக்’ இனத்தைச் சேர்ந்த ஹோப், இதற்கு முன்பு உலகிலேயே மிக நீளமான காதுகளைக் கொண்ட கழுதை என்ற சாதனையைப் படைத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றொரு கழுதை அந்தச் சாதனையை முறியடித்தது. இந்நிலையில், தற்போது மிக நீளமான வால் கொண்ட கழுதை என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது.

ஹோப்பின் வாழ்க்கையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மிகவும் மெலிந்த நிலையில், உடல்நலக் குறைவுடன் கைவிடப்பட்டிருந்த ஹோப்பை ஹன்னா ப்ரோஸ்ட் என்பவர் மீட்டார். பின்னர் தனது பண்ணையில் வைத்து அன்புடனும் முறையான பராமரிப்புடனும் வளர்த்து வந்தார்.

தற்போது ஆரோக்கியமாக வளர்ந்துள்ள ஹோப், உலக அளவில் புகழ்பெற்ற கின்னஸ் சாதனைக் கழுதையாக மாறியுள்ளது. கைவிடப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கழுதை, அடுத்தடுத்து இரண்டு முறை உலக சாதனை படைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இதையும் படிங்க: இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு 35% வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டம்: சீனாவுக்கு 40% வரை வரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com