தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 960 அதிகரிப்பு!

Gold Price Today: சென்னையில் தங்கம் விலை இன்று (நவம்பர் 26) கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

Published on: November 26, 2026 at 10:52 am

சென்னை, நவ.26, 2026: தங்கம் விலை கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது. தொடர்ந்து சரிந்து நவம்பர் 21-ம் தேதி ரூ.92 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது. இதனால் தங்கம் விலை மேலும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், நவம்பர் 23-ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அன்று ஒரு பவுனுக்கு ரூ.1,080-ம், நவம்பர் 24-ம் தேதி ரூ.920-ம் உயர்ந்தது. இதனால் இரண்டு நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2,000 அதிகரித்தது. இந்நிலையில், நேற்று (நவம்பர் 25) தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம், பவுனுக்கு ரூ.2,360-ம் அதிரடியாகக் குறைந்தது.

இந்தச் சூழலில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கனடா லாட்டரில் ரூ.30 கோடி பரிசு.. மலையாள அம்மணிக்கு அதிர்ஷ்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com