தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு! வெள்ளியும் குறைந்தது.. இன்றைய விலை என்ன?

Gold Price Today: சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 சரிந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published on: November 25, 2026 at 12:29 pm

சென்னை, நவ.25, 2026: சென்னையில் கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று (நவம்பர் 25) அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்திருந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள சரிவு நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தைத் தொட்டதைத் தொடர்ந்து, பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நவம்பர் 10-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்க நகைகள் வாங்குவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், நவம்பர் 23 மற்றும் 24-ம் தேதிகளில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.165-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம், வெள்ளி ஆகிய இரு உலோகங்களின் விலையும் ஒரே நாளில் சரிவைக் கண்டுள்ளது.

இதையும் படிங்க: அரிசி ஏற்றுமதிக்கு 30% வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை.. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com