நெதன்யாகு – ஐசன்காட் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கும்?

Israel Political Alliance Talks: நெதன்யாகு – ஐசன்காட் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் அடுத்து என்ன நடக்கும்?

Published on: November 24, 2026 at 2:18 pm

ஜெருசலேம், நவ.24, 2026: இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக இடைக்கால பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்காட்டின் யாஷர் கட்சிக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. இதில் ஆட்சியமைக்க 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களையும், நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களையும் பெற்றன. அரபு கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

கூட்டணி அமைப்பதில் இரு தரப்புக்கும் இடையே முக்கியமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, புதிய அரசின் பிரதமராக முதலில் யார் பதவியேற்பது, நெதன்யாகுவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதா, தீவிர வலதுசாரித் தலைவரான இடாமர் பென்-க்விரை கூட்டணியில் சேர்ப்பதா என்பதில் உடன்பாடு ஏற்படவில்லை. நெதன்யாகு பிரதமராகத் தொடர்வதை ஐசன்காட் தரப்பு விரும்பவில்லை.

இதற்கிடையே, வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் ஆட்சியமைக்க ஐசன்காட்டுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படலாம். அதற்குள் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாவிட்டால் மாற்று ஆட்சியமைப்பு முயற்சி அல்லது 2027-ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : இந்தியாவின் கலாசாரமும் மொழிப் பன்முகத்தன்மையும் வியக்க வைக்கின்றன.. ரஷ்ய அதிபர் புதின்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com